Monday, September 24, 2012


மனிதன் ?????????
( மனிதம் உள்ளவன் )

மனிதனின் 
பேராசைதான்
மரணத்தின்
வாசல்...

தேவை - அதிகரிக்க
அதிகரிக்க
மரணமும்
அதிகரிக்கும்...

இயற்கையை
அழித்தாய்!
மரணத்தை
விதைத்தாய்!
கேட்டால்
நாகரிகம்
என்கிறாய்!
எது நாகரிகம்?
மரணத்தை
விதைப்பதா?
தடுப்பது/தள்ளிப்போடுவதில்லையா???!!!


பணம் ஒன்று தான்
பிரதானம் என்கிறாய்!
பெற்ற உற்றாரைவிட...

மனிதனின் அஞ்ஞானத்தை
போக்கி
ஞானத்தை தரும்
கல்வி என்கிறோம்!
ஆனால்
ஞானத்தை போக்கி
அஞ்ஞானத்தை அல்லவா
தருகின்றது – இன்றைய கல்வி


 மனிதன் பணம் சம்பாரிக்கும்
இயந்திரமாக மாறிவிட்டான்...

கடமையை செய்து
வாழ்க்கையை அனுபவித்து
வாழும்
மனிதர்களை காண்பது
இப்பொழுது
கடவுளை காண்பது போலாகிற்று...

மனிதன்.!

மனிதன் பின்னால்..
மனிதனை பின்தொடர்ந்து...
அலைகின்றான்..
தொலைக்கின்றான்...
வாழ்க்கையை.

பணம் சேமிப்பதாக நினைத்து கொண்டு
நம் சமுதாயத்தை
நாமே அழிக்கின்றோம்.
கல்வி என்கிற பேரில்!!!!!

Sunday, September 23, 2012


சிசேரியன்
( கிளியோப்பட்டூரா - ஜூலியெஸ் சீஸர் )
               

புதிய பிரசவமுறைக்கு
தாய் – நீ!
குழந்தைக்கும் தாயும் – நீயே!


புதிய பிரசவமுறைக்கு
தந்தை – அவன்!
குழந்தைக்கு தந்தையும் – அவனே!
மருத்துவரும் – அவனே!


ஆகையால் தான்
அவனது பெயரால் – இந்த
பிரசவமுறைக்கு
சிசேரியன்
என்று
பெயர் வந்தது..



உன்னை நான்
மகா அழகி
என்று தான்
இதுவரை அறிந்து இருந்தேன் !!


ஆனால் நீயோ!
முதல் சிசேரியன் – ஆம்
அறுவைச் சிகிச்சை முறையில்
பிள்ளையை பெற்றெடுத்த – தாய் ( கிளியோப்பட்டூரா )!!!!!!!!!!


அவனை நான்
அரசனாக – மாவீரனாக
மட்டும் தான்
அறிவேன்!


ஆனால்
அவனோ
அந்த
அறுவைச் சிகிச்சையை
செய்து முடித்த
மருத்துவர்  ( ஜூலியெஸ் சீஸர் )
என்று
இன்று அறிந்துகொண்டேன்..................!!!!!!!


கல்விமுறையில் மாற்றம் வேண்டும்
( இன்றைய கல்விமுறையில் )

இன்றைய
கல்விக்கூடங்கள்
பணம் ஈட்டூம்
அலுவலகங்களாக மாறிவிட்டது...


கல்வி என்பதே
அரிதாகி விட்டது...


நல்ல – அறியுள்ள
ஞானத்தையும் அறிவையும்
வளர்க்கும் கல்வியே
கரைந்து போய்விட்டது...


மாணவர்களை
பணம் ஈட்டூம்
இயந்திரமாக்க
முயலுகின்றன
கல்விநிலையங்கள்...


தாய்மொழியையும் ,
தன் வரலாறையும் ,
புவிக்கோளத்தின் வரலாறையும்,
அவனிடம் மறைத்து விட்டு,,
ஆடம்பர
மாயையான
போலிகளை
உண்மை என்று
கற்பிக்க படுகிறது...


கல்விமுறையில்-இன்றைய
கல்விமுறையில்
மாற்றம் வேண்டும்...

மாற்றம் ஒன்றுதான்
மாறாதது !


பிள்ளைகளின் மனதில்
திணிக்காதீர்கள்-கல்வியை...
பிள்ளைகளே
அருந்தி அனுபவிக்கிற
கல்விமுறையை
கொண்டுவாருங்கள்...


புதிய
அறியுசார்
மாணவர்களை ,
மக்களை ,
சமுதாயத்தை
உருவாக்குவோம்...

ஜெய்ஹிந்த்……………….

Saturday, September 22, 2012


மன்மோகன்சிங் – அரசாட்சி
( பாமரனின் குமுறல் )



எல்லாவற்றிலும்
அந்நியத்தை
புகுத்திவிட்டாய்
பின்
ஏன்
இன்னும்
எங்கள்
சுவாசத்தை
மட்டும்
விட்டு
விட்டாய்....


ஒரு காலத்தில்
சலுகைகள்
வந்து
சேரவில்லை
என்று போராடினோம்
ஆனால்
இன்றோ
அடிப்படை
உரிமைகளுக்காகவே
போராட வேண்டியதுள்ளது...


தன் அரசாட்சி
நிலைக்க
தரணியையே
விலைபேச
விட்ட
வியாபாரி...


பதவி – ஆசை
என்கிற பேரில்
மக்களை
கொல்லும்
இயந்திரங்கள்...


மிருகங்கள்
என்று
சொல்லக்கூடாது
அவைகள்
நன்றிக்கு
பாத்திரமானவைகள்...


ஓட்டை
வாங்குவான்
உரிமையை
கேட்க
வைப்பான்
வேலையை
செய்ய
கடமையை
செய்ய
கைக்கூலி
கேட்கின்றான்...


மக்களின்
தேவையை
பூர்த்தி செய்ய
நியமிக்கப்பட்டவர்கள்..


மக்கள்
அவர்கள்
தேவைகளை
பூர்த்தியாக்க
ஆளாகிவிட்டனர்...


இன்றைய
நிலைமையோ
தலைகீழாக உள்ளது...


ஆட்சியில்
அமர்ந்து
மக்களுக்கு சேவை
செய்யச்சொன்னால்...


மக்கள்
இவர்கள் ஆட்சிக்கும்
அவர்கள் கை கூலிகளுக்கும்
ஓட்டளிப்பு மூலம்
சேவை செய்ய வேண்டியுள்ளது!!!!
கணவன் மனைவி உறவு

காமங்கள்
கலைந்து..
கண்கள்
அயர்ந்து..
கடைசியாய்
அயர்ந்து..
கிடந்தேன்..
உன் மடியில்..
என்னை
யார் என்று
தெரியாமல்
உச்சங்களை
உணர்ந்தேன்...
உன்
சிநேக நெருப்பையும்
சேர்த்துதான்....!!!
உங்களை அலங்கரிக்கின்றோம் எங்கள் மரணத்தால்




எங்கள் மரணத்தால்
உங்களுக்கு
பட்டு சரிகையாகின்றோம்
நான்தான் – பட்டாம்பூச்சி............


எங்கள் மரணத்தால்
உங்களுக்கு
புதிய செல்களாக அவதரிக்கின்றோம்
நான்தான் – உடற்செல்கள் ( மனித உடல் வளர்ச்சி )..............


எங்கள் மரணத்தால்
உங்களுக்கு
புதிய தேகத்தை தருகின்றோம்
நான்தான் – குழந்தை இளமைப்பருவம்..........


எங்கள் மரணத்தால்
உங்களுக்கு
புதிய சிந்தனை – ஞானத்தை
தருகின்றோம்
நான்தான் – மடமை ( அஞீஞானம் )...........


எங்கள் மரணத்தால்
உங்களுக்கு
புதிய ஜீவனை (கருத்தரிப்பை) கொடுக்கின்றோம்
நான்தான் – பின்னடையும் விந்தனு (கருத்தரிக்காத விந்து).........


எங்கள் மரணத்தால்
உங்களுக்கு
காயாகி கனியாகின்றோம்
நான்தான் – காய்கனிகளின் விதை...........


எங்கள் மரணத்தால்
உங்களுக்கு
ஆடம்பர பொருளாகின்றோம்
நான்தான் – மிருகங்களின் தோல்..........


எங்கள் மரணத்தால்
உங்களுக்கு
உடலாகின்றோம்
நான்தான் – மிருக இறைச்சி................


தினம் தினம்
எத்தனையோ
மரணங்கள்
எண்ணிலடங்கா
மரணங்கள்தான்
நம்மை அலங்கரிக்கின்றான.......................
தாய்மை




கருவினை ஈன்றெடுத்து
உன் தாய்மையை
காட்டிவிட்டாய்...

என் மௌனத்தை
கலைத்து விட்டாய்......

இருவரின் – நம்
இருவரின்
நிர்வாணத்தை
இச் சிசுபாலன்
தன் பிறப்பின் மூலம்
மறைத்துவிட்டான்....

உன் பரிசம்
என்னை கிறங்கடிக்கிறது....

ஓறாயிரம் வார்த்தைகள்
சொல்லுது
நாம் இட்டு கொண்ட
முத்தங்கள்......


நம் அணைப்பு
ஓறாயிரம்
அர்த்தங்களை
நமக்கு உணர்த்தியது.....

நாம் கொண்ட ஊடல்
நம்மையே மறக்க செய்தது.....

குழந்தையின் – நம்
குழந்தையின்
அங்க அசைவுகளை கண்டு
நான் ஆச்சரியத்தில்
மூழ்கி திளைத்தேன்......

உன்னுடன் இருந்தது
ஒரே ஒரு வாரம்.
ஆனாலும்,
நான் ஓராண்டாய்
நினைத்து மகிழ்கின்றேன்
மனம் என்னும்
மனித குரங்கை
மனைவியிடம் ஒப்படைத்துவிட்டு!!!