Saturday, September 22, 2012

அப்பாவிற்கு மடல்,


அப்பாவிற்கு மகனின் மடல்

  அப்பா துபாய் மெட்ரோ ரயிளில் 

      அப்பா மற்றும் தம்பியுடன் துபாய்


  அப்பா மற்றும் தம்பியுடன் துபாய்


அப்பா  இந்தியாவில் 

                                       
அப்பா நீங்கள் இருக்கும்போதே உங்களுக்கு நான் மரியாதை செலுத்திவிட
எண்ணுகின்றேன். மற்றவர்கள் தங்களின் பெற்றோர்களை கவிதைகளிலோ, கதைகளிலோ,
இலக்கியதிலோ அல்லது தங்களின் அனுபவங்களிருந்தோ இன்னபிற நிலைகளிலோ
பகிர்ந்து கொள்ளும்போதுமட்டும் நான் உங்களின் நினைவுகளை அசைபோடாமல்,
உங்களைபற்றி உங்களின் காலத்திலே நான் பகிர்ந்து கொள்ளுகின்றேன்.

இந்த விரைவான வாழ்க்கையில் நான் என்னையே தொலைத்துக்கொண்டிருக்கிறேன். என்
சந்தோஷத்தை, என் வாழ்க்கையை, என் இலட்சியதை, என் பரிவை, என் கற்பனைகளை,
இன்னும் பல சொல்லிலடங்கா காரியங்களை நான் என்னை அறிந்தும் அறியாமலும்
தொலைத்துக்கொண்டு இருக்கின்றேன்...இளமையையும் சேர்த்துத்தான்...... சரி
இது என்னைப்பற்றி பேசும்நேரமல்ல இது, உங்களைப்பற்றி பேச உங்களுக்காக நான்
ஒதுக்கும் நேரம் இது....

உங்களால மட்டும் எப்படி அப்பா எந்த கவலையும் இல்லாம உலகத்தை அதன்போக்கில்
விட்டு வாழமுடிகின்றது???

என் கையெழுத்தை என் மனைவிக்கும் மகனுக்கும் அறிமுகபடுத்தும் தருவாயில்
நான் வாழ்க்கையை தொடங்கியுள்ளேன், உங்கள் கையெழுத்தை என் தாயால்
அறிந்திருக்க முடிந்தது. உங்களால் என் தாயின் கையெழுத்தை அறிந்திருக்க
முடிந்தது என்பதை நான்/நாங்கள் நன்றாக அறிவோம்....

பிறப்பு என்பது ஒன்றுதான் நமக்கு (கிறிஸ்தவர்களுக்கு ), அது உங்களுக்கு
செம்மையாக அமைந்தது என்றே எண்ணுகின்றேன்.

அப்பா நான் உங்களிடம் சந்தோஷமாக, அன்பாக, பரிவாக பேசி உங்களை நன்றாக
கவனித்துகொள்ள வேண்டும் என்று எண்ணுகின்றேன்.

எங்களின் குழந்தைப்பருவம் முடிந்து உங்களின் குழந்தைப்பருவம் ( இரண்டாவது
குழந்தைப்பருவம்- முதிர்பருவம் ) நடந்து கொண்டு இருப்பதாக நான்
எண்ணவில்லை, ஏனெனில் வாழ்க்கை ஒரு தொடர் ஒட்டம் மட்டுமே அதில் எந்த
வளமையும் தளர்ச்சியும் இல்லை என்று எண்ணுங்கள்.

முதுமை என்பதோ, இல்லை, தளர்ந்த வயது என்பதோ, வயதாவது என்பது ஒரு எண்களின்
எண்ணிக்கை என்று மட்டும் எண்ணுங்கள், நான் உங்களுக்கு இதைப்பற்றி சொல்ல
வேண்டியதில்லை ஏனெனில் நீங்கள் ஓர் அறிவாளி என்பது எங்களுக்கு தெரியுமே.

அப்பா நாம் நிறைய பேசி இருக்கிறோமா?,சரி நாம் பேசியதை நிறைவாக பேசி
இருக்கிறோமா என்று, நான்/நாம் என்றாவது எண்ணிப்பார்த்து இருக்கவில்லை.

என் அம்மாவிடம் நான் நிறைவாக சந்தோஷமாக பேசி இருக்கின்‌றேனா?,  இல்லை
என்றுதான் என் இயலாமையின் பக்கத்தை புரட்டுவேன்.

வாழ்க்கையை வாழ்ந்து பார்த்துவிடனும் என்று நான் கேள்விப்பட்டதுண்டு,
உண்மையில் நான் வாழ்ந்து பார்த்து கொண்டிருக்கேனா என்று எனக்கு
தெரியவில்லை. உலகத்தின் வேகத்தில் நான் என்னை விரட்டுகின்றேன்,
உருட்டுகின்றேன் தொலைக்கின்றேன்.

மின்னஞ்சல்களில் மனிதத்தை தொலைத்து விட்டோம், அந்நிய மொழிகளிலே ஹாய், ஹலோ
என்று உணர்ச்சியற்ற வார்த்தைகளை பேசி உயிருள்ள வார்த்தைகளை நினைவுகளை
தொலைத்துக் கொண்டு இருக்கின்றோம்.

அப்பா உங்களிடம் நான் ரசித்த மற்றும் கற்றுக்கொள்ள நினைவில் கொள்ள
பின்பற்ற நினைக்கிற காரியங்களை பகிர்ந்து கொள்கிறேன், இது உங்களின்
ஆழ்மையை எங்களிடம், என்னிடம் பதித்தவை ( THIS IS MY FEEDBACK ABOUT YOU
), அவை நல்லவைகளோ கெட்டவைகளோ, என் தந்தை நான் ஜெனிக்க கடவுளின்
கிருபைக்கு அடுத்து என் தாயுடன் தன்னை பகிர்ந்து கொண்ட மனிதனின்
ஞாபகங்கள். என்னுள் பதிந்துள்ள நினைவுகளை நல்ல நினைவுகளை
வரிசைப்படுத்துகிறேன்.

       புனித இஞ்ஞாசியாரின் வாழ்க்கை தத்துவத்தை என்/எங்களின் பள்ளி
பருவத்தில் பதித்தது.

       நீங்கள் வகுப்பறையில் சொல்லிய வரலாற்று நிகழ்வுகள், அறிவியல் கண்டுபிடிப்புகள்.


       உங்களின் குருவிகுளம் பள்ளிப்பிராய கதை , புளுகினிவாத்தியர் கதை, கேரளா
கதை, பெண் பார்க்க சென்ற கதைகள் அத்தனையும் என்னில் ஆழமாக பதிந்தவைதான்
ஆனால் காலஓட்டத்தில் உங்களிடம் பதிர்துக்கொள்ளமுடியவில்லை நீங்கள் பதித்த
தடங்களை.


       நீங்கள் கணிதத்தில் திறமையானவர் என்று பலர் சொல்லி கேள்விப்பட்டுள்ளேன்.


       நீங்கள் நல்ல கபடி விளையாட்டு வீரர் என்று மற்றவர்கள்மூலம் கேள்விப்பட்டதுண்டு.


       நீங்கள் வாலிபத்தில் அழகாகவும் நல்ல நேர்த்தியான உடையணிந்தும்
இருப்பீர்கள் என்று கேட்டும், ஒரு புகைப்படத்தில் பார்த்தும்
இருக்கின்றேன், அதை என்னால்/எங்களால் பாதுகாக்க முடியவில்லை அச்சிறு
பிராயத்தில், அம்மாவின் புகைப்படத்தையும் சேர்த்துதான்.

       எதற்கும் கவலைபடாத உங்கள் மனது.


       எதிரிகளிடம் கூட அன்பாக பாழகும் மனது.

       கோபமான தருணங்களை கடக்கும்போது கூட கலங்காத அல்லது பதறாது காமெடி
பண்ணும் உங்கள் பேச்சு.


       எங்கு, யாரிடம் இவைகளை எல்லாம் கத்துக்கொண்டீர்கள்? நான் நினைப்பதுண்டு
பணக்காரன் மற்றும் நகரங்களில் வாழுகின்றவங்களுக்குதான் அறிவும் மற்ற
சமயோசனை சிந்தனைகள் இருக்குமென்று  நினைத்ததை போய்பித்தவர் நீங்கள்.

       குழந்தைப்பருவமும் இளமைப்பருவமும் (கல்லூரிப்பருவம் முடியும்வரை )
வறுமையில் இருந்து படித்த உங்களுக்கு, எப்படி வேலை கிடைத்தபின்பு
வாழ்க்கையை, சம்பாத்தியத்தை பாதுகாக்கதோணவில்லை?.

       எப்படி உங்களுக்கு பழமொழி அறிவு, கதை, நாடகம், ஆங்கில அறிவு மற்றும் பல
எப்படி கற்றுக்கொண்டீர்கள்.

       இன்பச்சுற்றுலா அழைத்து செல்வது.

       நாடகம் எழுதி நடிப்பது.

       நான் நினைத்ததுண்டு கிராமங்களில் உள்ள படித்தவர்கள் கூட
முட்டாள்களாகதான் இருப்பார்கள் என்று ஆனால் நீங்கள் அறிவாளிதான் அதை
சரியாக பயன்படுத்த/பண்படுத்தவில்லை அவ்வளவுதான்.

       கரசாமியாக இருந்து ஊரில் சீட்டு நடத்துவது.

       டூட்டோரியல்/ஆங்கில மீடியம் பள்ளி வைத்து நடத்தியது.

       எந்த அரசு சார்ந்த விசயங்களையும் அறிந்திருக்கின்றீர்கள்.

       நியூஸ் மற்றும் அரசு ஆணைகளைப்பற்றி ஆழ்ந்த அறிவு மற்றும்  அவைகளை
பகிர்ந்து கொள்ளும்தன்மை .

       சமையலும் உங்களுக்கு செய்ய தெரியும்.

       அம்மா எவ்வளவு கோபமாக இருந்தாலும் உங்களுக்கு அவர்களை சமாதானபடுத்த தெரியும்.

       நீங்கள் வாங்கிக்கொடுத்த பண்டங்கள் உணவுகள் அத்தனையும் நன்று.

       பள்ளிப்பருவங்களில் இன்பசுற்றுழா அலைத்து சென்றது ( குற்றாலம்,
கன்னியாகுமரி, கேரளா, கோடைக்கானல், வேளாங்கன்னி, தஞ்சாவூர், சுருளி
மற்றும் பல ).


       அப்பா நான்/நாங்கள் உங்களை மறந்துவிடவில்லை ஆனால் இந்த விரைவான விஞ்ஞான வாழ்க்கை சுழற்சிதான் உங்கள் நினைவுகளை நினைக்க, பகிர முடியாமல்

மழுங்கடிக்க செய்துகொண்டிருக்குது. காலத்தை சொல்லி என்ன குறை, நாம்தான்
மனதை பக்குவமாக வைத்துக்கொள்ளவேண்டும்.

       எந்த இடங்களுக்கு சென்றாலும் அங்குள்ள நம் உறவினர்கள் வீட்டீற்கு
செல்வது, எல்லாரிடமும் தான் ஒரு ஆசிரியர் என்ற பெருமை இல்லாமல் பழகுவது.

       உங்களின் நல்ல அனுபவங்கள், நல்ல ஆலோசனைகள் எங்களுக்கு நிறைய வேணும்.
அதற்கு நீங்கள் நல்ல உடல் ஆரோக்கியதுடனே வாழணும்......

       இன்னும் பல காரியங்களை நாம் நேரில்லோ அல்லது கடிதம் வாயிலாகவோ பகிர்ந்துகொள்வோம்.

No comments:

Post a Comment